திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகியை ஆவடி மகளிர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அப்படி என்ன காரியம் செய்தார் இந்த பாஜக பிரமுகர்? திருவள்ளூர் மாவட்டம் ஆவடியைச் சேர்ந்தவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி, 52 வயதாகிறது. திருவள்ளூர் பாஜக மேற்கு மாவட்ட துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார். ஆவடி பகுதியில் விநியோகஸ்தராகவும் உள்ளார். நளினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நளினியும், மூர்த்தியை உயிருக்கு உயிராக நேசித்திருக்கிறார்கள். இதையடுத்து, இருவரும், கடந்த 2008ல் திருமணம் செய்து கொண்டார். காதல் வாழ்க்கை இருவருக்குமே இனிமையாக சென்று கொண்டிருந்தது. பிறகு திடீரென கடந்த 2017ம் ஆண்டு, “டிராக்” மாற ஆரம்பித்தார் மூர்த்தி.
தேவிகா என்ற பெண்ணை விரும்பினார். தேவிகாவுக்கு 36 வயதாகிறது. இவரும் மூர்த்தியை நேசித்தார். ஒருகட்டத்தில் 2 பேருமே கல்யாணம் செய்து கொண்டனர். முதல் மனைவியை விட்டுவிட்டு, தேவிகாவுடனேயே குடும்பம் நடத்த துவங்கினார் மூர்த்தி.. வீட்டுக்கும் வருவதில்லை.. ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன், இன்னொரு பெண்ணை 2வதாக கல்யாணம் செய்ததால், நொந்துபோனார் நளினி. இதனால், மனவேதனையிலேயே துடிதுடித்து, 2018ம் ஆண்டிலேயே தற்கொலையும் செய்து கொண்டார்.
மகளிர் அணி: தற்போது மீண்டும் “டிராக்” மாறினார் மூர்த்தி. இரண்டாவது மனைவியான தேவிகாவை விட்டுவிட்டு, ஜென்சி என்பவரை காதலித்தார். பாஜக மகளிர் அணியை சேர்ந்தவராம் இந்த ஜென்சி. இவரும் மூர்த்தியை நேசித்தார். ஒருகட்டத்தில், மூர்த்தியும், ஜென்சியும் கல்யாணம் செய்து கொண்டனர். ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன்,
இன்னொரு பெண்ணை 3வதாக கல்யாணம் செய்ததால் நொந்து போனார் தேவிகா. ஆனால் நளினிபோல கோழைத்தனமான முடிவு எடுக்கவில்லை. நேராக, ஆவடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். பாஜக பிரமுகரான தன்னுடைய கணவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி மீது புகாரும் தந்தார். இந்த புகார் தொடர்பாக ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் மனைவி இருக்கும்போது 2வது திருமணம் செய்து, இரண்டாவது திருமணத்தை மறைத்து 3வது திருமணமும் செய்து, கதிகலங்க செய்த மூர்த்தியை கைது செய்தனர். இப்போது மூர்த்தி புழல் ஜெயிலில் உள்ளார்.. 3வதாக வாக்கப்பட்ட, பாஜக மகளிரணி ஜென்சி நிலைமை என்னவென்று தெரியவில்லை.