பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் தமிழகத்திற்கு இதுவரை செய்துள்ள நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு சென்றடைவதற்காக இந்த யாத்திரையை நான் மேற்கொள்வதால் இதனை ‘யாகம்’ என்றே குறிப்பிட வேண்டும் என்று தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார் .
பிரதமர் மோடியின் தலைமையை பாராட்டிய அண்ணாமலை, இது “சாமானியர்களின்” ஆட்சி என்றும், “அனைத்து இந்தியர்களையும் தனது பணியின் மூலம் பெருமைப்படுத்திய ஒரு சாதாரண மனிதர் மோடி என்றும் புகழ்ந்தார் .
மோடி அவர்கள் இதயபூர்வமான ஒரு தமிழர், அவர் தமிழர்களை உலகம் முழுவதும் பெருமை கொள்ளச் செய்துள்ளார், மேலும் தமிழ் கலாச்சாரத்தையும் தமிழின் உன்னதமான திருக்குறளையும் உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளார், இது ஐக்கிய நாடுகள் சபையிலும் எதிரொலித்தது, என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்விற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தும் பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை.
முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான ஆர்.பி.உதயகுமார் அதிமுக சார்பாக யாத்திரை தொடக்க விழாவில் கலந்து கொண்டு , அமித்ஷாவை “இந்தியாவின் இரும்பு மனிதர்” என்றும், அண்ணாமலையை “கரும்பு மனிதர்” (கரும்பு போன்ற இனிப்பு மனிதர்) என்றும் வர்ணித்தார்.
தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி கே.பழனிசாமியின் வாழ்த்துகளைத் தெரிவிக்கவே இங்கு வந்துள்ளேன் என உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த கட்சித் தலைவர் ஜெ ஜெயலலிதா மீது பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர் என்று உதயகுமார் கூறினார்.
அண்ணாமலைக்கு முன்பாக தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த எல் முருகன், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ‘வேல் யாத்திரை’ (வேல் என்பது முருகனின் ஆயுதமான ஈட்டியைக் குறிக்கிறது) மேற்கொண்டார். அந்த நேரத்தில் சுமார் 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 4 பாஜக தலைவர்கள் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரை 2020 ஆம் ஆண்டில் வட தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயில் நகரமான திருத்தணியில் இருந்து தொடங்கப்பட்ட நிலையில், தற்போதைய யாத்திரை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறது .
அண்ணாமலையின் யாத்திரை,ஆனது ஆளும் தி.மு.க.,கட்சியின் மீது இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை DMK FILES என்ற பெயரில் வெளியிட்ட பின்பு மேற்கொள்ள படுகின்றது , எனினும் இந்த குற்றசாட்டுகளை திமுக அரசு பொய்யானது என்று நிராகரிக்கப்பட்டுள்ளது .
பாஜகவின் மற்ற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான ஜி.கே.வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ்-மூப்பனார்), கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றனர். பாஜகவின் பி.சுதாகர் ரெட்டி, சி.டி.ரவி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.