தமிழகத்தில் மேலும் மூன்று பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பட்டுள்ளது. இதுவரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்று இந்திய அளவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி பேட்டி.
புவிசார் குறியீடுக்கான அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மேலும் மூன்று பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் வீரவாநல்லூர் பகுதியை சேர்ந்த செடிபுட்டா சேலைக்கு கடந்த 15.6.2021 ஆம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டது.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி கிராமத்தில் தயாரிக்கப்படும் நாமக்கட்டிக்கு 28.8.22 விண்ணப்பிக்கப்பட்டது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் விளைய கூடிய மட்டி வாழைப்பழத்திற்கு 29.04.22 ஆம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட தற்போது மூன்று பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக 30.03.2022 ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் 58 பொருள்களுக்கு புவிசார் கிடைக்கப்பெற்று இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் 15 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை தயாரிக்கும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் உயரும், இப்பொருட்கள் உலக அளவில் சந்தைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.