மத போதகர் உள்ளிட்ட மூவர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது

0
114
கைது செய்யப்பட்டவர்கள்

இலங்கைக்கு கடத்துவதற்காக‌‌ஆந்திராவிலிருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னரில் கொண்டு வரப்பட்ட 600 கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்‌‌பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை கோவில்பட்டி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

கோவில்பட்டி அருகே கயத்தாறு டோல் பிளாசாவில்  தனிப்படை போலீஸ் டீம் மேற்கொண்ட வாகன தணிக்கையின் போது கஞ்சா வாகனம் பிடிபட்டது. பிடிபட்ட கன்டெய்னரின் மேல் பகுதியில் தனி அறை ஏற்படுத்தி கஞ்சா பொட்டலங்களை கடத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடியை சேர்ந்த மத போதகர் உட்பட மூன்று பேரை கைது செய்தி தனிப்படை போலீஸ் டீம் தீவிர விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு டோல் பிளாசாவில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌பாலாஜி சரவணன்‌‌ஸ்பெஷல் டீம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்னை பதிவு எண் கொண்ட சந்தேகப்படும்படியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறியதையடுத்து ஸ்பெஷல் டீம் போலீசார்   கண்டெய்னர் லாரியை சோதனையிட்ட போது அதன் மேல் பகுதியில் தனி அறை அமைத்திருந்ததை கண்டுபிடித்து அதை திறந்து பார்த்ததில் தலா இரண்டு கிலோ வீதம் பேக்கேஜ் கொண்ட 300 பாக்கெட்டுகளில் 600 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து லாரியில் வந்த 3 பேரை பிடித்து கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து  மதுவிலக்கு டிஎஸ்பி சிவசுப்பு,   கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், மது விலக்கு இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர்  விசாரணை மேற்கொண்டதில்‌‌தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த (மத போதகர்) ஜான் அற்புத பாரத்,  பாண்டிச்சேரி மாநிலம் ஏனாம்  பகுதியைச் சேர்ந்த சக்தி பாபு( 39) (டிரைவர்) தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த விஜயகுமார் (36) என்பதும், ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சாவினை கொண்டு செல்ல இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து  3 பேரையும் போலீசார் கைது செய்து மினி கன்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர் .

‌பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின்‌‌மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.‌‌தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்‌‌பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை கோவில்பட்டி மதுவிலக்கு மல் பிரிவு காவல் நிலையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தனிப்படை போலீசாரை பாராட்டினார்.‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here