திருவள்ளூர் மாவட்டம் : காட்டுப்பள்ளி கடல் நீர் குடிநீராக்கும் ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம்..

0
64
  • காட்டுப்பள்ளி கடல் நீர் குடிநீராக்கும் ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம் வட சென்னைக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் பொதுமக்கள் குடிநீர் வினியோகம் இன்றி பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடல் நீர் குடிநீர் ஆலையை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் ஊதிய உயர்வு போனஸ் வழங்க வேண்டும் என கோரி தொழிலாளர்கள் போராட்டம். திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் அமைந்த சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான கடல் நீரை குடிநீராக்கும் ஆலை கடந்த 2010 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இங்கு சுமார் 100Mld மில்லியன் லிட்டர் தினந்தோறும் குடிநீர்உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இங்கு குடிநீர் உற்பத்தி வெகுவாக குறைந்து தற்போது வெறும் 28 எம் எல் டி மட்டுமே குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது தொடர்ந்து.

உற்பத்தி திறன் குறைந்ததால் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு குடிநீர் உற்பத்தி திறன் குறித்தும் இயந்திரங்கள் சேதமானது குறித்தும் பார்வையிட்டு 100 எம் எல் டி முழு இலக்கு உற்பத்தியை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து சென்ற நிலையில் தற்போது வரை முறையாக சீரமைக்கப்படாததால் உற்பத்தி திறன் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் மேலும் இங்கு ஆலை ஆரம்பித்த காலத்தில் இருந்து பணியாற்றி வரும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு ஊதிய உயர்வு போனஸ் உள்ளிட்டவை வழங்காமல் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததால் மூன்று ஷிப்டுகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தொடர் போராட்ட அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் குடிநீரானது எண்ணூர் திருவொற்றியூர் மாதவரம் மணலி உள்ளிட்ட வடசென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நாள்தோறும் தற்போது 28 எம் எல் டி குடிநீர் வழங்கி வந்த நிலையில் ஊழியர்களின் போராட்டம் காரணமாக குடிநீர் வினியோகம் தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/madras-high-court-orders-interim-stay-on-single-judge-who-allowed-reburial-of-body-of-corona-infection-victim/

இதனால் வட சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் போதிய குடிநீரை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here