மத்திய அரசின் சுற்றறிக்கையின்படி, இந்தியாவின் 16 மாநிலங்கள், கூல் லிப், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தங்கள் மாநிலங்களில் தடை செய்து உள்ளன. பிற மாநிலங்களில் ஏன் தற்போது வரை தடை செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
முன் ஜாமின் கோரும் வழக்குகள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களை அழைத்த நீதிபதி, “கூல் லிப்” உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார்.
அது தொடர்பாக ஹரியானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த கூல் லிப் உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ,
கூல் லிப், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களில் மண்டை ஓட்டுடன் கூடிய எச்சரிக்கை வாசகம் பதிவிடுவது குறித்து உரிய விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறினார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/a-student-from-thanjavur-has-set-a-record-by-winning-a-gold-medal-in-the-544th-silambam-competition-held-in-chennai/
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தரப்பில்,மது போதை மறு வாழ்வு மையம் இருப்பது போல், மாவட்ட மருத்துவ மனைகளில் புகையிலை போதை ஒழிப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.
நீதிபதி, மத்திய அரசின் சுற்றறிக்கையின் படி, இந்தியாவின் 16 மாநிலங்கள், கூல் லிப், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தங்கள் மாநிலங்களில் தடை செய்து உள்ளன. பிற மாநிலங்களில் ஏன் தற்போது வரை தடை செய்ய வில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி,வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.