இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் அல்லது வருவாய் ஓராண்டில் பெறுவோர் வருமான வரி செலுத்துவது கட்டாயமாகும். பழைய வரி செலுத்தும் முறையில் 5 லட்சம் ரூபாய் வரையும், புதிய வரி செலுத்தும் முறையில் 7 லட்சம் ரூபாய் வரையும் வரி செலுத்தத் தேவையில்லை. எனினும் இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் வரி விலக்குக்கு கணக்கை தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31ஆம் தேதியாகும். கடந்த 2021ஆம் ஆண்டில் 5 கோடியே 89 லட்சம் பேர் தங்கள் வருமான வரியை தாக்கல் செய்தனர்.இந்த எண்ணிக்கை கடந்தாண்டு 5 கோடியே 83 லட்சமாக குறைந்திருந்தது. ஜூலை 30ஆம் தேதியான நேற்று வரை மட்டும் 6 கோடிக்கும் அதிகமானோர் தங்கள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்து மைல்கல்லை எட்டியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 26,76,000 ஆயிரம் பேர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் 1கோடியே 30 லட்சம்பேர் தங்கள் கணக்குகள் தொடர்பாக லாகின் செய்திருக்கின்றனர்.
பழைய வரி செலுத்தும் முறையின்படி இரண்டரை லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருவாய் உள்ளவர்களும். புதிய முறைப்படி இரண்டரை லட்சத்தில் இருந்து 7 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளவர்களும் இன்று தாக்கல் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.வருமான வரி விலக்கு உச்சவரம்பை கடந்தும் வரி செலுத்தவில்லை என்றால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்.வருமான வரித்துறை அறிவித்துள்ளது.