- கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஷாலிமார் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. செகந்திரபாத்தில் இருந்து ஷாலிமார் சென்ற பயணிகள் ரயில் நல்பூர் அருகே விபத்துக்குள்ளானது.
3 பெட்டிகள் தடம்புரண்டது. மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ஷாலிமாருக்கு வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 22580) இயக்கப்பட்டு வருகிறது.
செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் மேற்கு வங்க மாநிலம் நல்பூர் அருகே வந்தபோது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. வண்டியின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “செகந்திராபாத் ஷாலிமார் வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 5.30 மணியளவில் மேற்கு வங்க மாநிலம் கேரக்பூர் மாவட்டம் நல்பூர் அருகே வந்துகொண்டிருந்தது.
நல்பூர் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது. 3 பெட்டிகள் தடம்புரண்டன. பயணிகள் யாருக்கும் இதுவரை எந்த உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை” என்று கூறினர்.ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் பயணிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவும் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளன.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/a-case-demanding-an-order-to-abandon-the-trekking-project-named-truck-tamil-nadu-introduced-by-the-tamil-nadu-government/
ரயில் விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த பயணிகளை தாங்கள் செல்லும் இடத்திற்கு செல்வதற்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விபத்து எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.