தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் ஏ.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை அரசின் உள்துறை செயலாளர் பி.அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார். அவர்கள் யார், எந்தெந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதை விரிவாக பார்க்கலாம். தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்று சற்றுமுன் (ஜூலை 30) வெளியாகியுள்ளது. அதாவது, 4 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்களுக்கு (ASP) காவல்துறை கண்காணிப்பாளர்களாக (SP) பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அமுதா ஐஏஎஸ் அரசாணை:
கூடவே பணியிடமாற்றமும் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் பி.அமுதா ஐஏஎஸ் முக்கியமான அரசாணை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,
திருச்சி மாநகர காவல்துறை ஆணையகம்:
எஸ்.ரவிச்சந்திரன், திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் I பட்டாலியனில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்தார். இவருக்கு எஸ்.பி ரேங்கிற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாநகர காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோடிலிங்கம், சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. உன்னி கிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி ஊரக உட்கோட்டம் திரு. சுரேஷ், திருச்செந்தூர் திரு. வசந்த்ராஜ், ஸ்ரீவைகுண்டம் திரு. மாயவன், கோவில்பட்டி திரு. வெங்கடேஷ், மணியாச்சி திரு. லோகேஸ்வரன், விளாத்திகுளம் திரு. ஜெயச்சந்திரன், சாத்தான்குளம் திரு. அருள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு திரு. சிவசுப்பு, ஆயுதப்படை திரு. புருஷோத்தமன், மாவட்ட குற்றப் பிரிவு திரு. ஜெயராம் உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் டூ சென்னை:
ஹெச்.ரமேஷ் பாபு, விழுப்புரத்தில் உள்ள காவல்துறை பயிற்சி பள்ளியில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்தார். இவருக்கு தற்போது எஸ்.பி ரேங்கிற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகர காவல்துறையின் உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவியில் ஏற்கனவே எம்.ராஜராஜன் பதவி வகித்து குறிப்பிடத்தக்கது.
அரியலூர் டூ சென்னை:
வி.மலைச்சாமி, அரியலூர் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக பதவி வகித்தார்.
இவருக்கு எஸ்.பி ரேங்கிற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கத்துறையின்
காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் டூ ஆவடி:
ஏ.சி.செல்லப்பாண்டியன், சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவின் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்தார்.
இவருக்கு தற்போது எஸ்.பி ரேங்கிற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் Vபட்டாலியனில் கமாண்டண்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.