டெல்லியில் 45 லட்சம் ஹவாலா பணத்துடன் கைதுசெய்யப்பட்ட நபர் , பின்னணியில் யார் ?

0
89
ஹவாலா பணத்துடன் கைது செய்யப்பட்ட ஜக்கு

சட்டவிரோத ஹவாலா பணமோசடி செய்ததாக 40 வயதுடைய நபரை கவுதம் புத்த நகர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.45 லட்சம் மற்றும் 5 போலி ஆதார் அட்டைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் டெல்லி மீரட் பகுதியில்  உள்ள கன்கர்கெடாவில் வசிக்கும் ஜக்கு என்ற ஜக்கிவான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். செவ்வாய்கிழமை இரவு செக்டார் 113 காவல் நிலைய அதிகாரிகள் செக்டார் 112 இல் இ-ரிக்ஷாவில் ரூ.45 லட்சத்துடன் ஜக்கிவானை பிடித்தனர். இருப்பினும், பணம் குறித்து போலீசாரிடம் ஏற்புடைய விளக்கத்தை அவரால் அளிக்க முடியவில்லை.

இதையடுத்து கவுதம் புத்தா நகரில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் ஹவாலா தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர் பணமோசடி கும்பலைச் சேர்ந்தவர் என்றும் , கைது செய்யப்பட்ட குற்றவாளிடம் இருந்து 5 ஆதார் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது , இந்த  ஆதார் அட்டைகளை பயன்படுத்தி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சித்தும் போலீசார் விசரணையில் தெரியவந்துள்ளது .

இதில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் கண்டுபிடித்து அவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நொய்டாவின் கூடுதல் துணை கமிஷனர் சக்தி மோகன் அவஸ்தி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் .

கூட்டாளிகளான ஜிதேந்திரா, ராகுல் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் ஜக்கிவான் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் ஜக்கு, ஜூலை 25 அன்று ஒரு பையில் பணம் நிரப்பப்பட்டபோது, ​​அமைதியாக தனது பணப்பையை தூக்கிஜக்கு, ஜூலை 25 அன்று பணம் நிரப்பப்பட்ட பையுடன் அவரை கைது செய்த போது அவர் தன்னிடம் இருந்த மணி பர்ஸை அடர்ந்த புல்வெளியில் தூக்கி எறிந்துளார் .

அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் மறுநாள்  நொய்டா, செக்டார் 112ல் சாலையோரம் உள்ள அடர்ந்த புல்லில் இருந்து அவர் தூக்கி எறிந்த  கருப்பு நிற பர்ஸை மீட்டனர் , அதில் குற்றம் ஜக்குவின்  புகைப்படங்களுடன் 5 போலி ஆதார் அட்டைகள் மீட்கப்பட்டன.

இந்திய தண்டனைச் சட்டம்  419 (நபர் மூலம் ஏமாற்றுதல்), 420 (ஏமாற்றுதல்), 467, 468, 471  மற்றும் 120பி (குற்றச் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் செக்டார் 113 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

பொதுவாக இது போன்ற ஹவாலா மோசடி வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளளை போலீசார் நெருங்குவது கூட இல்லை என்றும் , கீழ்மட்ட நிலையிலுள்ள நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து , ஹவாலா பணமுதலைகளை , போலீசார் எளிதில் தப்பிக்க வைத்து வருவதாகவும் , சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here