கோவையில் 20 ஆண்டுகள் பழமையான இரண்டு சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை குறிச்சி ஹவுஸிங் யூனிட் பகுதியில் நர்சரி பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட காலியிடம் ஒன்று உள்ளது. இந்த இடத்திற்கென பாதுகாவலர் யாரும் இல்லை. இந்நிலையில் இங்கு சுமார் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு சந்தன மரங்கள் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு மரங்களையும் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் சுந்தராபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.