தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கும் திரை படங்கள் .! எந்த படத்தை பார்க்க போறிங்க .! முழு லிஸ்ட் இதோ!

0
48
  • தீபாவளி அன்று தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

அமரன்: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’. ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையே இப்படத்தின் கதைக்களம். உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் சினிமா ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் வரும் தீபாவளி அன்று தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.

பிரதர்: ஒரு கல் ஒரு கண்ணாடி பட இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, ப்ரியங்கா மோகன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரதர்’. இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அணைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் தீபாவளி அன்று தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.

பிளடி பேக்கர்: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bloody Beggar’. இப்படத்தில் கவின் பிச்சைக்காரன் தோற்றத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படம் வரும் 31ம் தேதி தீபாவளி அன்று தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.

கொஞ்சம் இதையும் படிங்க :https://www.thenewscollect.com/actor-vijay-said-that-we-will-not-do-any-foolish-work-like-alternative-politics/

Bhool Bhulaiyaa 3: கார்த்திக் ஆரியன், நடிகை வித்யா பாலன் மற்றும் நடிகை மாதுரி தீட்சித் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி பேய் திரைப்படம் Bhool Bhulaiyaa 3. காமெடி, திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளிக்கு மறுநாள் தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.

Singham Again: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் Singham Again. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படம் வரும் நவம்பர் 1ம் தேதி ஆதாவது தீபாவளிக்கு மறுநாள் தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.

Bagheera: நடிகர் ஸ்ரீ முரளி, ருக்மணி வசந்த், நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னட திரைப்படம் Bagheera. சஸ்பென்ஸ் த்ரில்லிங் ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் 31ம் தேதி தீபாவளி பண்டிகை நாளன்று தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.

LUCKY BASKHAR: துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் LUCKY BASKHAR. க்ரைம், த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தீபாவளி பண்டிகை நாளன்று தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here