சாவர்கர் எங்கள் கடவுள் – ராகுலுக்கு , தாக்ரே எச்சரிக்கை ….

0
93
சாவர்கர் - ராகுல் காந்தி

சமீபத்தில் ராகுல் காந்தி , சாவர்கர் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே ஒரு பனிப்போரை உருவாக்கியுள்ளது .

ராகுலின் இந்த பேச்சு , நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஓட்டுவங்கிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் .

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு தேர்தல் பிரச்சாரத்தின போது ஒட்டுமொத்த் ‘மோடி’ ஜாதியினரை  அவதூறாக பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சூரத் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர்  உத்தரவு பிறப்பித்தார்.இதனை தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் காங்கிரசார் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதே சமயம் எம்.பி பதவி பறிப்புக்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ‘நான் காந்தி. சாவர்க்கர் இல்லை. காந்திகள் மன்னிப்புக் கேட்க மாட்டார்கள்’ என தெரிவித்து இருந்தார்.

ராகுல்காந்தியின் இந்த பேச்சு பெரும் சர்சைகளை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் ராகுலின் பேச்சு எதிர்கட்சிகளை கோபத்திற்கு ஆளாக்கி உள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு ‘சாவர்க்கர் குறித்து இழிவாக பேசக்கூடாது. அப்படி பேசுவது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் ’ என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தவ் தாக்கரே

இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே கூறும்போது, ‘அந்தமான் சிறையில் கற்பனையால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பல கொடுமைகளை 14 ஆண்டுகள் சாவர்க்கர் அனுபவித்தார். நாம் அதை பற்றி வாசிக்க மட்டுமே செய்கிறோம். இதுவும் ஒருவகையான தியாகம் தான்.

சாவர்க்கர் எங்களின் கடவுள். அவரை அவமரியாதை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் போராட தயாராகிக்கொண்டு இருக்கிறோம். எங்களின் கடவுளை இழிவுப்படுத்துவது என்பது சகித்துக் கொள்ள முடியாதது’ என கூறி இருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்  ராகுலின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற என்ற கலகத்திலுள்ளனர் காங்கிரஸார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here