என்ன? செய்தார் எம்பி., வேலூர் சட்டமன்ற தொகுதி.!

0
85
திருவள்ளூர் பெயர் பலகை

வேலூர் மக்களவைத் தொகுதியானது 1951-52 இந்தியப் பொதுத் தேர்தலிலிருந்து 2008 இல்
எல்லை நிர்ணயம் செய்யப்படும் வரை பின்வரும் சட்டமன்ற பகுதிகளைக் கொண்டது.

1.வேலூர்
2.அணைக்கட்டு
3.குடியாத்தம்(தனி)
4.கே.வி.குப்பம்(தனி)
5.வாணியம்பாடி
6.ஆம்பூர்

1951 மு. முத்துகிருஷ்ணன்  இந்திய தேசிய காங்கிரஸ்
டாக்டர் டிஎல்எம்பி ராமச்சந்தர்  காமன்வெல் கட்சி
1957 என்.ஆர்.முனிசாமி  இந்திய தேசிய காங்கிரஸ்
மு. முத்துகிருஷ்ணன்
1962 அப்துல் வாஹித்  இந்திய தேசிய காங்கிரஸ்
1967 குசேலர்                       திராவிட முன்னேற்றக் கழகம்
1971 ஆர்.பி.உலகநம்பி  திராவிட முன்னேற்றக் கழகம்
1977 வி.தண்டாயுதபாணி  இந்திய தேசிய காங்கிரஸ்
1980 ஏ.கே.ஏ.அப்துல் சமத்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
1984 ஏசி சண்முகம்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1989 ஏ.கே.ஏ.அப்துல் சமத்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
1991 பி. அக்பர் பாஷா  இந்திய தேசிய காங்கிரஸ்
1996 பி.சண்முகம்  திராவிட முன்னேற்றக் கழகம்
1998 என்.டி.சண்முகம்  பாட்டாளி மக்கள் கட்சி
1999 என்.டி.சண்முகம்  பாட்டாளி மக்கள் கட்சி
2004 கே.எம்.காதர் மொஹிதீன்             இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2009 அப்துல் ரஹ்மான்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2014 பி.செங்குட்டுவன்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019 திமுக கதிர் ஆனந்த்  திராவிட முன்னேற்றக் கழகம்

தி.மு.க கதிர் ஆனந்த் 4,85,340 
அதிமுக ஏசி சண்முகம் 4,77,199

கோட்டை

வேலூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின்  39 மக்களவைத் தொகுதிகளுள்  8வது தொகுதி ஆகும். இந்தியாவின் முதல் மக்களவை தேர்தல் நடைபெற்ற 1951ஆம் ஆண்டிலிருந்தே இந்த தொகுதி இருந்து வருகிறது. சுமார் 10 லட்சம் வாக்காளர்களை கொண்ட வேலூர் தொகுதியில் 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின், வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன.

இந்த தொகுதியில் அதிகபட்சமாக திமுக  ஆறு முறை வென்றுள்ளது.
காங்கிரஸ் 5 முறை வென்றுள்ளது.

நாட்டின் முதல் இரண்டு மக்களவை தேர்தல்களின்போது இந்த தொகுதியில்
இரட்டை உறுப்பினர்கள் முறை நடைமுறையில் இருந்தது. அதன்படி 1951ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காமன்வீல் கட்சியை சேர்ந்த ராமச்சந்திர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முத்துகிருஷ்ணன், முனியசாமி ஆகிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவரும் வேலூர் தொகுதியில்
வெற்றிபெற்றிருந்தனர்.

பீரங்கி

இதுவரை நடைபெற்றுள்ள 17 மக்களவைத் தேர்தல்களில், வேலூர் தொகுதியில்
ஒரே ஒரு முறை மட்டுமே சுயேச்சை வேட்பாளர் பெற்றுள்ளார். 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏ.கே.ஏ. அப்துல் சமது, 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொகுதியின் முக்கிய பிரச்சனைகள்:

வேலூர் மக்களவைத் தொகுதி என்றாலே வெயில்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
அடிப்படையில் அதிக வெயிலும், தண்ணீர் பஞ்சமும் மிக்க பகுதியாக இருந்து வரும் வேலூருக்கு,அங்கு அதிக அதிகளவில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகள் மேலும் அதிக பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பெரும்பாலான தோல் தொழிற்சாலைகள்கடைபிடிக்காததால் அவற்றின் கழிவுகள் நேரடியாக ஏரி, குளம், குட்டைகளில்கலப்பதால் அவற்றிலுள்ள தண்ணீரை அருந்தும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதுடன், சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும் பயன்படுத்தமுடியதாக அளவுக்கு மோசமான நிலையை அடையும் நிலை பல தசாப்தங்களாக இருந்து வருகிறது.

இந்தியாவின் ஏற்றுமதி வர்த்த கத்தில் தோல் மற்றும் தோல் பொருட்கள் முக்கிய  இடத்தை பிடித்துள்ளது.உலக அள வில் இந்தியா தோல் வர்த்தகத்தில் 2வது இடத்திலும், தமிழ்நாடு தோல் தொழிலில் சிறந்து விளங்குகிறது. வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தோல் தொழில் நடந்து வந்தாலும் ஒருங்கினைந்த வேலூர் மாவட்டம் இத்தொழிலில் முதன்மை பெற்று விளங்குகிறது.குறிப்பாக வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு, மேல்விஷா ரம், ராணிபேட்டை ஆகிய பகுதிகளில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும், 400க்கும் மேற்பட்ட ஷூ மற்றும் கையுறை தொழிற்சாலைகளும் உள்ளது. இந்த தொழிற்சாலைகள் மூலம்5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும்,மறைமுகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

தோல் தொழிற்சாலை

குறிப்பாக படிக்காத பெண்க ளுக்கு கூட எளிதில் வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களாக ஷூ மற்றும் கையுறை தொழிற்சாலைகள் ஒருங்கினைந்த வேலூர் மாவட்டத் தில் இயங்கி வருகிறது.பெரும்பா லான ஷூ மற்றும் கையுறை தொழிற் சாலைகளில் பெண்கள் தேவை என விளம்பரம் பதாகை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்  டத்தில் இருந்து தோல் பொருட்கள்  வர்த்தகம் அதிக அளவில் இருப்ப தால் ஆம்பூர் நகருக்கு ஏற்றுமதி சிறப்பு நகரம் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தோல் பொருட்களில் முக்கிய மானது கை உரைகள் மற்றும் ஷூ எனப்படும் தோல் காலணி ஆகும்.ஆம்பூர், ராணி பேட்டை ஷூ மற்றும்  தோல் பொருட்கள் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி,ஹாங்  காங், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ரஷியா, இங்கிலாந்து, ஆஸ்திரே லியா, ஜரோபியா யூனியன் உள்ளிட்ட உலகின் அனைத்து  நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதுமட்டுமின்றி, வேலூரில் ஓடும் பாலாற்றில் தண்ணீருக்கு பதிலாக மணல் லாரிகளே அதிகளவில் ஓடும் சூழ்நிலையை மாற்றி பாலாற்றை முற்றிலுமாக உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே வேலூர் தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பெரும்பாலும் சாலை போக்குவரத்தையே நம்பியுள்ள இந்த மாவட்டத்தில் அதிகளவிலான சாலை விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.எனவே, சாலை வசதிகளை மேம்படுத்துவதுடன், தேவையான இடங்களில் மேம்பாலங்களை கட்ட வேண்டுமென்றும் இந்த தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here