கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தினசரி சிகிச்சை பெற்று வருகின்றனர்,மேலும் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் அடிக்கடி சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகிறது, வால்பாறையில் இருந்து வரும் நோயாளிகளுக்கு அவசர காலத்துக்கு சிகிச்சையை இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் கொண்டு செல்லப்படுகின்றனர்,
தலைமை மருத்துவர் ஒருவர் இரண்டு கூடுதல் மருத்துவர்கள்,ஆறு செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள் இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்,இந்த மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவ மனைக்கு செல்கின்றனர்,மேலும் தற்போது தூய்மை பணியாளர் பெண் மருத்துவமனைக்கு வந்த நோயாளிக்கு காலில் அடிபட்டதால் சிகிச்சை அளிக்கும் வீடியோ சுற்று வட்டார பகுதிகளில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,
தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் நலன் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள் மருத்துவமனைக்கு நியமிக்க வேண்டும் எனசுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் முதல்வருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.