TVKVIJAY: மாநாட்டில் விஜய் கூறிய குட்டி கதைகள் இது தான் …!

0
38
  • தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் தனது வழக்கமான ஸ்டைலில் குட்டிக்கதை ஒன்றை கூறினார். தம்பி உனக்கு எல்லாம் என்ன தெரியும் என்று விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த குட்டி கதையை கூறினார். சிறு வயதில் போருக்கு சென்ற பாண்டிய மன்னனின் கதையை கூறி கட்சியின் கொள்கையை விளக்கினார். சின்ன படையுடன் போருக்கு சென்ற பாண்டிய வம்சத்தை சேர்ந்தவன் என்று விஜய் பேசினார்.

தம்பி உனக்கு எல்லாம் என்ன தெரியும்.. நீ எல்லாம் எப்படி தாக்கு பிடிப்ப.. அரசியல் பெரிய அகழியாச்சே.. அதில தண்ணீரில மூழ்கிவிட்டு தலையை தூக்கிக்கொண்டு.. வாயை திறந்துக்கொண்டு இருக்கும் போது.. முதலைகள் எல்லாம் இருக்குமே.. இதையெல்லாம் தாண்டி நீ எப்படி கோட்டைக்குள்ள போவ… என கேள்வி மேலே கேள்வி.. கேள்வி மேலே கேள்வி.. இந்த கேள்விகளுக்கு எல்லாம் நம்ம ஸ்டைலில் ஒரு குட்டிக்கதை சொல்லட்டுமா..

ஆடியோ லாஞ்சில் சொல்றமாதிரியெல்லாம் இல்லாம.. மோட்டிவேஷன் கதை எல்லாம் இல்லை. அரசியலில் நம்முடைய ஸ்டான்ட் என்ன? நம்முடையை நிலைப்பாடு என்ன? என்பதை சொல்லுகிற கதை.. அந்த கதையில், “ஒரு நாட்டில் ஒரு பெரிய போர் வந்துச்சாம்.. அப்போ அந்த நாட்டில் பெரிய பவர்புல்லான தலைமை இல்லாமல் போனதால், ஒரு பச்சைப்புள்ள கையில் தான் பொறுப்பு இருந்துச்சாம்.

இதனால அந்த நாட்டில் இருந்த பெருந்தலைகள் எல்லாம் பயந்துகொண்டிருந்தார்களாம். ஆனால் அந்த சின்ன பையன் நாட்டோட படையை வழிநடத்துறை பொறுப்பை எடுத்துக்கொண்டு போருக்கு போவோம் என்று சொன்னானாம்.. அப்போது அங்குள்ள பெரிய தலைகள் எப்பா நீயே சின்னப் பையன்பா.. இது பெரிய போர்க்களம்பா.. அங்க பவர்புல்லான்ன நிறைய எதிரிகள் எல்லாம் இருப்பாங்கப்பா..

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/vijay-gave-an-emotional-speech-indirectly-criticizing-dmk-and-seeman/

களத்தில் அவங்கள சந்திக்கிறது எல்லாம் சாதாரணம் கிடையாதுப்பா.. சொன்னா கேளுப்பா.. இது ஒன்னும் விளையாட்டு இல்ல.. நீ பாட்டுக்க குடுகுடுன்டு போயிட்டு வீட்டுக்கு வர்றதுக்கு. போர் என்றால் படையை நடத்த வேண்டும். முக்கியமாக களத்தில இருக்கிற எதிரிகள் எல்லாத்தையும் சமாளிச்சு தாக்குப்பிடிக்கனும். எப்படி நீ ஜெயிப்ப.. என்று பெரிய தலைகள் எல்லாம் கேட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here