விஜய் vs அஜித் என்பது மாறி., இப்பொழுது விஜய் vs ரஜினியா.? என்ன செய்கிறது ஜெயிலர் படக்குழு!

0
98
இப்பொழுது விஜய் vs ரஜினியா.? என்ன செய்கிறது ஜெயிலர் படக்குழு!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தில் வரும் ஜுஜுபி பாடலின் லிரிக்கல் வீடியோ ஜூலை 26ம் தேதி மாலை வெளியிடப்பட்டது. அனிருத் இசையில் சூப்பர் சுப்பு எழுதிய ஜுஜுபி பாடல் தலைவர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னமா பாட்டு எழுதியிருக்கிறார் இந்த சுப்பு, நீங்கள் நிஜமாகவே சூப்பர் என ரஜினி ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

களவாணி கண்ணையா என துவங்கும் ஜுஜுபி பாடலில் அந்த களவாணி கண்ணையா என்பது விஜய் தான் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார், எங்கள் தளபதி தான் இன்றைய சூப்பர் ஸ்டார் என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் ஜுஜுபி பாடலில் காளைக்கே கொம்ப சீவிப்புட்டே, அது முட்டி கிழிச்சு வீசாமத் தான் விடுமா உன்னய. பகையாகிப் போனா பலியாவ வீணா என்கிற வரிகள் விஜய்யை மனதில் வைத்து எழுதப்பட்டது என சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. முன்னதாக ஜுஜுபி பாடல் வெளியாகப் போகிறது என்று அறிவிப்பு வந்ததுமே இதுவும் விஜய்யை பற்றிய பாடலாகத் தான் இருக்கும்.
அவரை தான் ஜுஜுபி என்கிறார்கள் என ரசிகர்கள் பேசத் துவங்கினார்கள். இந்நிலையில் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி இது கண்டிப்பாக விஜய்ணாவுக்கு தான் பதிலடி என்கிறார்கள்.

ஜுஜுபிக்கு முன்பாக வெளியான ஹுகும் பாடலும் தளபதி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ரஜினி ரசிகரான சூப்பர் சுப்பு எழுதிய அந்த பாடல் விஜய்யை தாக்குவது போன்று இருப்பதாக தளபதி ரசிகர்கள் தெரிவித்தார்கள். இந்நிலையில் ஜுஜுபியும் விஜய்யை தாக்குவது போன்றே இருக்கிறது என்கிறார்கள்.

ஹுகும் பாடல் விஜய்யை தாக்கி வெளியானது அல்ல. யாரையும் தாக்கி பாடல் எழுதச் சொல்லும் ஆள் இல்லை ரஜினி சார். அவரின் தன்னம்பிக்கை லெவலே வேறு. இது ஜெயிலர் கதாபாத்திரம் வேறு யாருக்கோ சொல்லும் தகவல் போன்று தெரிகிறது என்றும் அவர் தான் சூப்பர் ஸ்டார் என தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்தார்.

இந்நிலையில் ஹுகும் போய் ஜுஜுபி பிரச்சனை எழுந்திருக்கிறது. இதற்கிடையே ஓய்வு எடுக்க மாலத்தீவுகளுக்கு சென்ற ரஜினிகாந்த் சென்னை திரும்பிவிட்டார். வெள்ளை நிற டி-சர்ட்டில் எளிமையாக வந்த அவரை பார்த்த ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள்.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நாளை நடக்கவிருக்கிறது. நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் அந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் கலந்து கொள்கிறாராம். விஜய்யை அழைத்ததற்கு அவர் வர மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. விஜய் வெளிநாட்டிற்கு கிளம்பிவிட்டார். அதனால் ஜெயிலர் விழாவில் அவரை பார்க்க வாய்ப்பே இல்லை. தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது.
ஜெயிலர் விழாவில் தனுஷ் கலந்து கொள்வாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையே ரஜினியின் ஜெயிலருடன் சேர்ந்து மலையாள ஜெயிலரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தான் ரிலீஸாகிறது.
ஜெயிலர் தலைப்பு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here