லைகா நிறுவனம்
தமிழ்நாட்டின் இளைஞர்களின் ஹீரோ விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜேசன் சஞ்சய் இயக்குநராகும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.உதவி இயக்குநராக பணிபுரியாமல் நேரடியாக படம் இயக்கவுள்ளார் ஜேசன் சஞ்சய்.
கல்வி
இந்நிலையில், அவரது கல்வித் தகுதி,பள்ளிப் படிப்பை சென்னையில் முடித்த ஜேசன் சஞ்சய், கனடாவில் கல்லூரி படித்துள்ளார். கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா மேக்கிங் முடித்ததும், லண்டனில் திரைக்கதை எழுதுவதற்கான சிறப்பு பயிற்சியை எடுத்துள்ளார். அதன்பின்னரே ஷார்ட் ஃபிலிம்ஸ் இயக்கியுள்ளார் சஞ்சய். சினிமா மேக்கிங்கில் ஆர்வம் இருந்தாலும், சஞ்சய் மிகச் சிறந்த பேஸ்கட் பால் பிளேயர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இசை கேட்பதிலும் அவருக்கு ஆர்வம் அதிகமாம்.
2000ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பிறந்த ஜேசன் சஞ்சய், . சென்னையில் வளர்ந்த சஞ்சய், அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் தான் படித்துள்ளார். சின்ன வயதில் இருந்தே திரைப்படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டிய சஞ்சய், உலக சினிமாக்களை விரும்பி பார்ப்பாராம். அதனால், நடிப்பை விட டைரக்ஷன் பக்கமே தனது கவனத்தை செலுத்தியுள்ளார். இதன் காரணமாகவே அல்போன்ஸ் புத்ரன், சுதா கொங்கரா போன்ற இயக்குநர்கள் கேட்டும், அவர்களின் படத்தில் நடிக்க தலையசைக்கவில்லையாம்.
விஜய் தற்போதைய படம்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
விஜய் ரசிகர்கள் அவரது மகன் இயக்கும் முதல் படம் எப்படி இருக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.படத்தின் ஹீரோ யார் என்றும் இன்னமும் முடிவாகவில்லை யார் ஹீரோ காத்திருப்போம….