விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே
மழவராயநல்லூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று 1000-க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தன. இதை பார்த்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இது குறித்து ஏரியை குத்தகை எடுத்துள்ள நாராயணசாமி கூறுகையில், அரசாங்கத்தின் மூலம் 5000 ரூபாய் பணம் கட்டி குத்தகைக்கு எடுத்ததாகவும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தில் 50 ஆயிரம் கட்டி மீன் வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஏரியில் அதிக மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து தெரியவில்லை. ஏரியில் உள்ள நீரை கால்நடைகள் குடிப்பதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுேமா என்று கிராம மக்கள் அச்சப்படுகிறார்கள்.
எனவே ஏரியின் நீரை எடுத்து ஆய்வு செய்து, மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து கண்டறிய வேண்டும் எனவும் மர்ம நபர்கள் யாராவது ஏரியில் விஷ மருந்து கலந்து உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.