நேபாளம் நாட்டில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோர் இறகுப்பந்து போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக கலந்து கொண்டு நேபாள வீரரை தோற்கடித்து பதக்கம் வென்று திரும்பிய மாணவனுக்கு ஆசிரியர்கள் பாராட்டு.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருபவர் ஸ்ரீ சுதன். இவர் கடந்த 14 ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதி வரை நேபாள் நாட்டில் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இறகுப்பந்து பேட்மிட்டன் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு இறுதி போட்டியில் நேபாள வீரரை தோற்கடித்து வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.
இந்த நிலையில் வெற்றி கோப்பையுடன் திரும்பிய மாணவன் ஸ்ரீ சுதனை பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் மாணவன் ஸ்ரீ சுதன் பேசும் பொழுது இந்த வெற்றி எனக்கு மிகப் பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது. தொடர்ந்து மென்மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெறுவேன்.
எனக்கு இந்த போட்டியில் வெல்வதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்