தொகுதி மறுசீரமைப்புக்குப் முன்பிருந்த சட்டமன்றத் தொகுதிகள் –
பள்ளிப்பட்டு,
அரக்கோணம் (தனி),
சோளிங்கர்,
இராணிப்பேட்டை,
ஆற்காடு,
செய்யார் ஆகிய தொகுதிகள் இருந்தன.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.
அவைகள்:
1.திருத்தணி
2.அரக்கோணம் (தனி)
3.சோளிங்கர்
4.காட்பாடி
5.இராணிப்பேட்டை
6.ஆற்காடு

6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 ஓ. வி. அழகேசன் இந்திய தேசிய காங்கிரசு
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 ஏ. எம். வேலு இந்திய தேசிய காங்கிரசு
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 ஆர். ஜீவரத்தினம் இந்திய தேசிய காங்கிரசு
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 ஆர். ஜீவரத்தினம் இந்திய தேசிய காங்கிரசு
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 ஆர். ஜீவரத்தினம் இந்திய தேசிய காங்கிரசு
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 ஏ. எம். வேலு தமிழ் மாநில காங்கிரசு
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 சி. கோபால் அதிமுக
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 எஸ். ஜெகத்ரட்சகன் திமுக
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 அர. வேலு பாமக
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 எஸ். ஜெகத்ரட்சகன் திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 ஜி. ஹரி அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 எஸ். ஜெகத்ரட்சகன் திமுக
17வது மக்களவைத் தேர்தல் (2019)
இத்தேர்தலில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 13 வேட்பாளர்கள்
சுயேட்சையாகவும் என மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன்,
பாமகவின் ஏ. கே. மூர்த்தியை, 328,956 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேலூர்,ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காட்பாடி சட்டப்பேரவைத்
தொகுதிகளுடன், திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி தொகுதியை இணைத்து
உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதி அரக்கோணம்.
பெருமளவு கிராமப்புறங்களை கொண்ட இந்த தொகுதி ஒரே ஜீவாதாரம் பாலாறு.
இந்த நதி வறண்டு விட்டதால் விவசாயம் பொய்த்து விட்டது. ஒரு சில பகுதிகளில்
மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது. அதேசயம் ராணிப்பேட்டை பகுதியில்
தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட சில தொழில்கள் மட்டுமே நடைபெறுகின்றன.
இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பெருமளவு வேலை வாய்ப்புக்காக,
அருகில் உள்ள மிகப்பெரிய நகரான சென்னைக்கு தொழில் தொழிலாளர்களாக செல்கின்றனர்.

தொழிலுக்காக தினந்தோறும் சென்னைக்கு பயணம் செய்வது இப்பகுதி மக்களின்
வாழ்வில் அங்கமாகி விட்டது. கல்வி, வேலைவாய்ப்புக்காக இவர்கள்
சென்னையையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
அரக்கோணத்தில் ரயில்வே தொழிலாளர்களும், ராணிப்பேட்டை பகுதியில் டெல் உட்பட பல தொழிற்சாலைகளும், ஆற்காடு, ராணிப்பேட்டை பகுதியில் தோல் தொழிற்சாலைகள் பரவலாக உள்ளதால் தொழிலாளர்கள் அதிகமும்முள்ள தொகுதியாகவும் உள்ளது.

அரக்கோணத்தில் மூடிவைக்கப்பட்டுள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையை மீண்டும் திறந்து, உள்ளுர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
சோளிங்கர் நகரில் உள்ள நரசிங்கபெருமாள் கோயில்க்கு ரோப் கார் அமைத்து தர வேண்டும்.
ஆசியாவில் மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை நகரை தூய்மை நகராக மாற்ற வேண்டும்.
அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.
திண்டிவனம் டூ நகரி இரயில் பாதை திட்டத்தை விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும்.
சோளிங்கர் பகுதியில் அரசு கல்லூரி உருவாக்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகள் மக்களிடத்தில் உள்ளது.