தலையங்கம்….
இந்த சமூகத்தை ஆளும் தகுதி பிராமணர்களே தங்கள் கைகளில் வைத்திருப்பது தான் சனாதனம். ஆளுநர் தமிழிசை கூட அது பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் அதை தவிர்த்து விட்டு ஆன்மிக கருத்துகளாகவே அதற்கு தொடர்ந்து விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிற இந்துத்துவ ஆதரவாளர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர்கள்.
ஒவ்வொரு ஜாதிகளுக்கும் தனித்தனி வாழ்விடங்கள். ஒவ்வொரு சாதிகளுக்கும் தனித்தனி தொழில்கள், ஒவ்வொரு சாதிகளுக்கும் தனித்தனி சுடுகாடு, ஒவ்வொரு ஜாதிகளுக்கும் தனித்தனி திருமண முறை, தனித்தனி கல்வி முறை, தனித்தனி வாழ்வு முறை, தனித்தனி கலாச்சாரம், அவற்றை பரம்பரை, பரம்பரையாக தக்க வைத்துக் கொள்வது தான் சனாதனம்.
இதை யாரும் மறுக்க முடியாது.
பகுத்தறிவு கருத்துக்கள் நமக்குள் நிறைந்த பிறகு இதை ஒழிப்பதை தவிர வேறு எதுவும் சமதர்மத்தை நிலைநாட்டாது என்பதை நாம் உணர்ந்த பிறகு சனாதனத்தை ஒழித்துக் கட்டுவது தான் சரியானது.
பெண் கல்வி, பெண் விடுதலை குலக்கல்வி ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு மனிதனாக இந்த சமூகத்தில் ஆண், பெண் இருபாளரும் சமமாக நடத்தப்பட வேண்டும். சமமாக நடக்க வேண்டும் என்கிற நிலையில்தான் சனாதனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வருகிறோம்.
சமூக நீதியை நிலைநாட்ட சம தர்மத்தை வலியுறுத்த சனாதனம் எதிராக நிற்குமேயானால் அதை ஒழித்துக் கட்டுவதை தவிர வேறு வழி இல்லை. சனாதனம் என்பதை முதலில் அதற்கு ஆதரவாக நின்று பேசுகிறார்கள் முழுமையாக புரிந்து கொள்ளட்டும் நுனிப்புல் மேய்வது சரியல்ல.
ஆசிரியர்
ஜோதி நரசிம்மன்
சிறப்பு