சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி எங்கே தங்க வைக்கப்படுகிறார்? எங்கே விசாரணை செய்யப்படுகிறார்? எப்படி விசாரணை செய்யப்படுகிறார்? என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது.
அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்ற காவலில் கொண்டு செல்லப்பட்டு விட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக உயர் நீதிமன்றம் இதேபோல 8 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. ஆனால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்ததால் அமலாக்கத்துறை காவலில் அவரை எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் மருத்துவமனையில் இருந்த நாட்களை விசாரணை நாட்களாக கருத கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
![](https://www.thenewscollect.com/wp-content/uploads/2023/09/newproject-2023-08-08t071102-691-1691458893-1.jpg)
கஸ்டடி:
செந்தில் பாலாஜியை 5 நாட்கள் கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் செந்தில் பாலாஜி வந்துள்ளார். ஆகஸ்ட் 12ம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் இனி அமலாக்கத்துறை என்ன வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இதையடுத்து செந்தில் பாலாஜி நேற்று கஸ்டடி எடுக்கப்பட்டார்.
நீதிமன்ற காவலில் இருந்தவருக்கான டிரான்ஸ்பர் நடவடிக்கை நேற்று முடிந்தது. இதையடுத்து நேற்று இரவே செந்தில் பாலாஜி கஸ்டடி எடுக்கப்பட்டார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கி உள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு செந்தில் பாலாஜி காலை உணவு சாப்பிட, 9 மணிக்கு அமலாக்கத்துறை விசாரணை தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இன்று அவரிடமே 50 கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முழு கட்டுப்பாடு:
இந்த 5 நாட்கள் செந்தில் பாலாஜியின் உணவு தொடங்கி தூங்கும் நேரம் வரை அனைத்தையும் அமலாக்கத்துறையே முடிவு செய்யும். அவரிடம் பல நூறு கேள்விகளை அமலாக்கத்துறை கேட்கும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது. தினமும் 50 கேள்விகள் குறைந்தபட்சம் கேட்கப்படும். இதில் செந்தில் பாலாஜி சரியாக பதில் அளிக்காத நிலையில் அவரின் கஸ்டடியை நீட்டிக்க கோரி அமலாக்கத்துறை கோரிக்கை வைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
எங்கே தங்குவார்?:
எப்படி விசாரிக்கப்படுவார?: அவர் தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தங்கி உள்ளார். அங்கே உள்ளே விசாரணை கைதிகளுக்கான அறையில் அவர் உள்ளார்.
ஆனால் விசாரணைக்கு சாஸ்திரி பவனில் இருக்கும் விசாரணை மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். இதுதான் தினசரி நடைமுறை. இரண்டிற்கும் இடையே ஒன்றரை கிலோ மீட்டர் தூரம்
மட்டுமே உள்ளதால் பயண நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே. தினமும் இங்கிருந்து அங்கே பயணம் செய்து விசாரணை செய்வார்கள்.
விசாரணையை ரெக்கார்ட் செய்யவும், சில தகவல்களை திரட்டவும் வசதியாக சாஸ்திரி பவனில் விசாரணை செய்கின்றனர்.
அதேபோல் செந்தில் பாலாஜிக்கு staple உணவு எனப்படும் பருப்பு உணவுகள், இட்லி, தோசை, அரிசி உணவுகள் என்று மிகவும் லேசான சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு ஹெவி உணவுகள் வழங்கப்படுவது இல்லை.