மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு என்ற தலைப்பில் சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது தேவை அடிப்படையிலான கூலி வேலை வாய்ப்புத் திட்டமாகும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் 2005-ன்படி, பயனாளிகளில் மூன்றில் ஒருவராவது பதிவு செய்து வேலை கேட்ட பெண்களாக இருக்க வேண்டும் என்ற வகையில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறது. மேலும் நாட்டின் 34 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் வாரியாக 100 நாள் வேலை திட்டத்தில் பெண்களின் பங்கேற்பு குறித்த விவரங்களையும் பட்டியலிட்டிருக்கிறது.
இதில் தமிழ்நாட்டு பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் 2022 ஏப்ரல் மாதம் வரை 86.87% பங்கேற்றனர். 2022 மே மாதம் வரை 85.84% பங்கேற்றனர் 2022 ஜூன் மாதம் வரை 85.25% % பங்கேற்றனர்.
2022 ஜூலை மாதம் வரை 85.15% பங்கேற்றனர். 2022 ஆகஸ்ட் மாதம் வரை 85.16% பங்கேற்றனர். இந்திய அளவில் தமிழ்நாட்டு பெண்கள் 85%-க்கும் அதிகமாக 100 நாள் வேலை திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டை விட புதுச்சேரி முன்னணியில் உள்ளது. புதுச்சேரியில், 2022 ஏப்ரல் மாதம் வரை 86.54% பங்கேற்றனர் 2022 மே மாதம் வரை 87.45% பங்கேற்றனர். 2022 ஜூன் மாதம் வரை 87.48% % பங்கேற்றனர் 2022 ஜூலை மாதம் வரை 87.80% பங்கேற்றனர். 2022 ஆகஸ்ட் மாதம் வரை 87.45% பங்கேற்றனர். இந்திய அளவில் கேரளா மாநில பெண்கள்தான் தான் 100 நாள் வேலை திட்டத்தில் மிக அதிகமாக பயனடைகின்றனர்.
கேரளாவில் 2022 ஏப்ரல் மாதம் வரை 88.32% பங்கேற்றனர் 2022 மே மாதம் வரை 88.60% % பங்கேற்றனர் 2022 ஜூன் மாதம் வரை 88.61% பங்கேற்றனர். 2022 ஜூலை மாதம் வரை 88.75% பங்கேற்றனர். 2022 ஆகஸ்ட் மாதம் வரை 88.97% பங்கேற்றனர். தாதர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. 2022 ஆகஸ்ட் மாத புள்ளி விவரப்படி
மாநிலங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண்களின் பங்கேற்பு விவரம்:
ஆந்திரப் பிரதேசம்- 59.55 %
அருணாச்சலப் பிரதேசம்- 45.30%
அசாம்- 47.14%
பீகார்- 56.12%
சத்தீஸ்கர்- 53.17%
கோவா- 82.16%
குஜராத்- 48.04%
ஹரியானா- 59.66%
இமாச்சலப் பிரதேசம்- 63.23%
ஜம்மு காஷ்மீர் – 23.76%
ஜார்க்கண்ட்- 45.47%
கர்நாடகா- 51.53%
கேரளா- 88.97%
லடாக்- 59.85%
மத்தியப் பிரதேசம்- 41.90%
மகாராஷ்டிரா- 47.13%
மணிப்பூர்- 54.41%
மேகாலயா- 54.70%
மிசோரம்- 50.40%
நாகாலாந்து- 42.30%
ஒடிசா- 47.43%
பஞ்சாப்- 66.64%
ராஜஸ்தான்- 66.84%
சிக்கிம்- 54.14%
தமிழ்நாடு- 85.16%
தெலங்கானா- 60.71%
திரிபுரா- 46.23%
உத்தரப் பிரதேசம்- 37.60%
உத்தரகண்ட்- 54.85%
மேற்கு வங்காளம்- 48.10%
அந்தமான் நிக்கோபார்- 53.74%
தாதர் ஹவேலி- 0.00
லட்சத்தீவு- 66.67%
புதுச்சேரி- 87.80%இந்தியாவிலேயே 100 நாள் வேலை திட்டத்தால் அதிகம் பயனடைவது கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டு பெண்கள்தான் என்கிறது மத்திய அரசின் புள்ளி விவரம்.