உணவு மற்றும் தண்ணீர் தேவைகளை நாடி வன விலங்குகள் பெரும்பாலும் ஊருக்குள் வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஊருக்குள் புகுந்து வலம் வரும் யானைகள் வீடுகளுக்குள்ளே வைக்கப்பட்டுள்ள பொருட்களை சேதம் செய்வதுடன் மக்கள் மத்தியிலே ஒரு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
கோவை மாவட்டம் மாங்கரை மற்றும் தடாகம் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது வனப்பகுதிக்குள் போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் நேற்று தடாகம் அடுத்த மூலக்காடு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று யானைகள் கொண்ட கூட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டனர் எனினும் அந்த பகுதியிலேயே சுற்றி வந்த யானைகள் காலை ஆறு மணி அளவில் நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்குள் புகுந்து குடியிருப்பு வழியாக வனப்பகுதிக்குள் சென்றது இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.